பட்டையை கிளப்பும் ‘பார்க்கிங்’ படத்தின் இரண்டாம் நாள் வசூல்!

photo

 வளர்ந்து வரும் இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘பார்க்கிங்’ படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல் வந்துள்ளது.

photo

சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்க அறிமுக இயக்குநரான ராம் குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள படம் ‘பார்க்கிங்’. இந்தப்படத்தில் ஹரிஸ் கல்யாணுடன் இணைந்து இந்துஜா, எம். எஸ் பாஸ்கர், ராம ராஜேந்திரன், இளவரசு, பிராத்தனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளனர். அன்றாட வாழ்வில் அனைவரும் சந்திக்கக்கூடிய பார்க்கிங் பிரச்சனையை கையில் எடுத்து அதனை ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். இந்த நிலையில் படம் பலரது பாராட்டுகளையும், நல்ல விமர்சனத்தையும் குவித்து வரும் நிலையில் முதல் நாளில் ரூ.45 லட்சத்திற்கு மேல் வசூலித்தது, இரண்டாவது நாளில் ரூ.90 லட்சத்திற்கு மேல் வசூலித்து பட்டையை கிளப்பி வருகிறது. இன்று விடுமுறை என்பதால் வசூல் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.

Share this story