வெற்றிகரமான ஓட்டம்- ‘பார்க்கிங்’ பட முதல் நாள் வசூல் விவரம்!

photo

இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் நேற்று வெளியான ‘பார்க்கிங்’ படத்தின் முதல் நால் வசூல் குறித்த தகவல் வந்துள்ளது.

photo

ஹரிஸ் கல்யாணுடன் இணைந்து இந்துஜா, எம். எஸ் பாஸ்கர், ராம ராஜேந்திரன், இளவரசு, பிராத்தனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ள படம் ‘பார்க்கிங்’. இந்த படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்க அறிமுக இயக்குநரான ராம் குமார் பால கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார். அன்றாட வாழ்வில் அனைவரும் சந்திக்கக்கூடிய பார்க்கிங் பிரச்சனையை கையில் எடுத்து அதனை ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். இந்த நிலையில் படம் பலரது பாராட்டுகளையும், நல்ல விமர்சனத்தையும் குவித்து வருகிறது. படம் முதல் நாளில் ரூ.45 லட்சத்திற்கு மேல் வசூலித்துள்ளது. தொடர்ந்து படத்தின்  வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Share this story