‘பார்க்கிங்’ படத்தின் முதல் பாடல் வெளியானது.

photo

ஹரிஷ் கல்யாண், இந்துஜா நடிப்பில் தயாராகியுள்ள ‘பார்க்கிங்’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

photo

சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பில் அறிமுக இயக்குநரான ராம் குமார் பால கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள படம் ‘பார்க்கிங்’. இந்த படத்தில் ஹரிஸ் கல்யாணுடன் இணைந்து இந்துஜா, எம். எஸ் பாஸ்கர், ராம ராஜேந்திரன், இளவரசு, பிராத்தனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் படத்தின் முதல் பாடலான ‘செல்ல கள்ளியே’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. சாம் சி எஸ் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த பாடலை அவரே எழுதியும் உள்ளார்.  பாடலை கபில் கபிலன் பாடியுள்ளார்.

படத்தின் ரிலீஸ் தேதி முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், அது பின்னர் மாற்றாப்பட்டுள்ளது. விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

Share this story