ஓடிடியில் வெளியான ‘பார்க்கிங்’ திரைப்படம்.

photo

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘பார்க்கிங்’ திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

photo

சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்க அறிமுக இயக்குநரான ராம் குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள படம் ‘பார்க்கிங்’. இந்தப்படத்தில் ஹரிஸ் கல்யாணுடன் இணைந்து இந்துஜா, எம். எஸ் பாஸ்கர், ராம ராஜேந்திரன், இளவரசு, பிராத்தனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளனர். அன்றாட வாழ்வில் அனைவரும் சந்திக்கக்கூடிய பார்க்கிங் பிரச்சனையை கையில் எடுத்து அதனை ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். படம் பலரது பாராட்டுகளையும், நல்ல விமர்சனத்தையும் குவித்தது.  இந்த நிலையில் இன்று படம் ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது.  தொடர்ந்து ரசிகர்கள் தியேட்டர்களில் ஆதரவு கொடுத்ததைப் போல ஓடிடி தளத்திலும்  ஆதரவு கொடுப்பார்களா என்பதை பார்க்கலாம்.

Share this story