விறுவிறுப்பை கூட்டும் ‘பார்க்கிங்’ பட ஸ்னீக் பீக்.
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகியுள்ள ‘பார்க்கிங்’ படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது.
சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பில் அறிமுக இயக்குநரான ராம் குமார் பால கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள படம் ‘பார்க்கிங்’. இந்த படத்தில் ஹரிஸ் கல்யாணுடன் இணைந்து இந்துஜா, எம். எஸ் பாஸ்கர், ராம ராஜேந்திரன், இளவரசு, பிராத்தனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஏற்கனவே படத்தின் பாடல்கள், டிரைலர் ஆகியவை வெளியான நிலையில் தற்போது ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. அதில் கார் வைத்துள்ள ஹரிஸ் கல்யாண் மற்றும் எம்.எஸ் பாஸ்கர் இருவரும் தங்களது காரை பார்க் செய்வதற்காக ஆபீஸில் இருந்து அவசர அவசரமாக வருகின்றனர். இறுதியார் யார் காரை பார்க்க செய்தனர் என்பதை படம் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த ஸ்னீக் பீக் படத்தின் மீதான எதிர்பார்பை கூட்டியுள்ளது.