மூன்று நாளில் நல்ல கலெக்ஷன் செய்த ‘பார்க்கிங்’ படம்.

photo

வளர்ந்து வரும் இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘பார்க்கிங்’ படம் மூன்று நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது  குறித்த தகவல் வந்துள்ளது.

photo

சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்க அறிமுக இயக்குநரான ராம் குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள படம் ‘பார்க்கிங்’. இந்தப்படத்தில் ஹரிஸ் கல்யாணுடன் இணைந்து இந்துஜா, எம். எஸ் பாஸ்கர், ராம ராஜேந்திரன், இளவரசு, பிராத்தனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளனர். அன்றாட வாழ்வில் அனைவரும் சந்திக்கக்கூடிய பார்க்கிங் பிரச்சனையை கையில் எடுத்து அதனை ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.

இந்த நிலையில் படம் பலரது பாராட்டுகளையும், நல்ல விமர்சனத்தையும் குவித்து வரும் நிலையில் முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இது வரை படம் ரூ. 1.6 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

Share this story