பார்க்கிங் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியீடு

பார்க்கிங் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியீடு

ஹரிஸ் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் பார்க்கிங் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது.

‘எல்ஜிஎம்‘ படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பார்க்கிங்’. சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். இவர் மேயாத மேன், பிகில் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர். மேலும் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிராத்தனா நாதன், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிஜு சன்னி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். 

பார்க்கிங் திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியீடு

இத்திரைப்படம் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், படம் தள்ளிப்போனது. இந்நிலையில், வரும் டிசம்பர் 1-ம் தேதி படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 
 

Share this story