பார்க்கிங் திரைப்படம் செப்டம்பர் 28-ம் தேதி வௌியாகவுள்ளதாக தகவல்
1694008157314

ஹரிஷ் கல்யாண் நடிக்கும் பார்க்கிங் திரைப்படம் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
எல்.ஜி.எம். படத்தை தொடர்ந்து, த்ரில்லர் படம் ஒன்றில் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கும் இப்படத்துக்கு 'பார்க்கிங்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாம் சிஎஸ் படத்திற்கு இசை அமைக்கிறார். இந்நிலையில், வரும் செப்டம்பர் 28-ம் தேதி திரைப்படம வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.