‘பார்க்கிங்’ டிரைலர் எப்போது? -வீடியோ வெளியிட்ட படக்குழு.

photo

‘பார்க்கிங்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்து அசத்தலான வீடியோ மூலமாக தெரியப்படுத்தியுள்ளர் படக்குழு.

photo

சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரிப்பில் அறிமுக இயக்குநரான ராம் குமார் பால கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள படம் ‘பார்க்கிங்’. இந்த படத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகரான ஹரிஸ் கல்யாணுடன் இணைந்து இந்துஜா, எம். எஸ் பாஸ்கர், ராம ராஜேந்திரன், இளவரசு, பிராத்தனா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சாம் சி எஸ் படத்திற்கு இசையமைத்துளார். படத்தின் டீசர், பாடல்கள் வெளியாகிய நிலையில் படத்தின் டிரைலர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


அதன்படி டிரைலர் வரும் 17ஆம் தேதி காலை 11மணிக்கு வெளியாகவுள்ளது, அதற்கான அறிவிப்பு வீடியோவில் ஹரிஸ் கல்யாண் ரோடு ரோடாக சென்று பார்க்கிங் போர்டு வைத்து படத்தை புரொமோட் செய்வது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.படம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Share this story