ரசிகர்களிடம் திடீர் மன்னிப்பு.. நடிகர் பார்த்திபனின் ட்வீட்டால் பரபரப்பு !

parthiban

‘இரவின் நிழல்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகாததற்கு ரசிகர்களிடம் நடிகர் பார்த்திபன் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். 

உலகிலே ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் நான்-லீனியர் திரைப்படமாக உருவான படம் ‘இரவின் நிழல்’. ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட இந்த படத்தை பார்த்திபன் இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்கில் வெளியாகி நல்ல வசூலை குவித்தது. அதோடு பல பிரபலங்கள் இந்த படத்தை பார்த்து பாராட்டினர். 

parthiban

திரையரங்கில் வெளியான இப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர்.  இதையடுத்து அமேசான் ப்ரைமில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே ‘இரவின் நிழல்’ வெளியாகும் என அறிவித்திருந்தார். ஆனால் சொன்னபடி இப்போது வரை இரவின் நிழல் திரைப்படம் வெளியாகவில்லை. 

இந்நிலையில் இரவின் நிழல் ஓடிடியில் வெளியாகாததற்கு நடிகர் பார்த்திபன் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், மன்னிக்க…. நானும் ஆவலுடனே காத்திருக்கிறேன், but some technical issues it’s taking time-ன்னு Amazon-ல சொல்றாங்களாம்.மீண்டும் ஒரு முறை உறுதிபடுத்திக் கொண்டு தெரிவிக்கிறேன்.அதுவரை பொறுத்தருள்க திரையரங்கில் நீங்கள் எனக்களித்த வரவேற்பே என்னைத் திக்குமுக்காட வைத்தது. நான் பெரிதும் மன்னிக்க…. நான் பெரிதும் மதிக்கும் நீங்கள் OTT-யில் வர காத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளித்தாலும், தாமதமாவதற்கு மீண்டும் ஒரு முறை மன்னிப்புக் கேட்டு,ottயில் வருகையில் பேராதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று  தெரிவித்துள்ளார். 

Share this story