பார்த்திபனின் வித்தியாசமான படைப்பாக உருவாகியுள்ள ‘இரவின் நிழல்’... ரிலீஸ் தேதி அறிவிப்பு
முன்னணி இயக்குனரான பார்த்திபன், தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல புதிய புதிய முயற்சிகளை செய்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே 'ஒத்த செருப்பு சைஸ் 7' என்ற வித்தியாசமான படைப்பை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். இதையடுத்து 'இரவின் நிழல்' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் பார்த்திபனுடன் இணைந்து முதல் முறையாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும் பணியாற்றியுள்ளார். இப்படம் சிங்கிள் ஷாட் படமாக உருவாகி வருவாகியுள்ளது. அதாவது ஒரே டேக்கில் ஒட்டுமொத்த படம் நிறைவுபெற்று விடும். இந்திய சினிமாவில் புதிய முயற்சியாக இந்த படத்தை பார்த்திபன் எடுத்துள்ளார். பார்த்திபனின் இந்த புதிய முயற்சியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இப்படத்தில் பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், பிரிகடா ஆகியோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜூலை 15-ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

