ஓடிடியில் வெளியாகும் 'இரவின் நிழல்'... நிம்மதி பெருமூச்சு விட்ட ரசிகர்கள் !

iravin nizhal

பார்த்திபனின் 'இரவின் நிழல்' படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பதை நடிகர் பார்த்திபன் அறிவித்துள்ளார். 

 தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் பார்த்திபன். அந்த வகையில் 'ஒத்த செருப்பு' படத்திற்கு பிறகு பார்த்திபனின் வித்தியாசமான படைப்பாக 'இரவின் நிழல்' திரைப்படம் வெளியானது. உலகிலே ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் நான்-லீனியர் திரைப்படமாக  உருவான இப்படம் கடந்த சில மாதத்திற்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

iravin nizhal

ஒரே டேக்கில் ஒட்டுமொத்த படத்தையும் பார்த்திபன் எடுத்துள்ளார். இந்திய சினிமாவில் புதிய முயற்சியாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்காக முதல் முறையாக ஏ.ஆர்.ரகுமானுடன் பார்த்திபன் கூட்டணி அமைத்தனர். ‌ இந்தப் படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ஆனந்த கிருஷ்ணன், பிரிஜிடா சாகா ஆகியோர் நடித்துள்ளனர்.

iravin nizhal

திரையரங்கில் வெளியான இப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். இந்நிலையில் 'இரவின நிழல்' திரைப்படம் ஓடிடியில் வெளியாவது குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை பார்த்திபன் வெளியிட்டுள்ளார். அதில் அமேசானில் இன்றோ நாளையோ ‘இரவின் நிழல்’ வந்தே விடும் ! அதை வரவேற்க நீங்களும், அறிவிக்க நானும் ஆவலுடன் … இருக்கிறோம். பார்ப்போம்! நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி!!! என்று குறிப்பிட்டுள்ளார்.  


 

Share this story