‘நம்மையறியாமல் கண்கள் விசும்ப...’ - சீனுராமசாமி படத்தை பாராட்டிய பார்த்திபன்!

parthiban

தேசிய விருது பெற்ற படைப்பாளியான இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ எனும் திரைப்படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்யா, ‘குட்டி புலி’ தினேஷ், லியோ சிவகுமார், ஐஸ்வர்யா தத்தா, பவா செல்லதுரை, மானஸி கொட்டாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.அசோக் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என் ஆர் ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.இந்த திரைப்படத்தை விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டொக்டர் டி. அருளானந்து தயாரித்திருக்கிறார்.


விரைவில் திரைக்கு வர உள்ள இந்த திரைப்படத்தை இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பார்த்து பாராட்டி வாழ்த்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் "சீனு இராமசாமி அவர்களின் அக்மார்க் முத்திரையில்’கோழிப்பண்ணை செல்லதுரை’ வெகு இயல்பான எளிமையான எள்ளளவும் சினிமாத்தனம் இல்லாமல்,பாசத்தின் வலிமையும் மனிதநேயத்தின் அவசியத்தையும் வலியுறுத்தும் கிராமியப் படம்.நாயகன் செல்லதுரையாக வாழ்ந்திருக்கிறார் கிளைமேக்சில் நம்மையறியாமல் கண்கள் விசும்ப" என்றிருக்கிறார்.


 

Share this story