கமலுடன் மோதும் பார்த்திபன்..!

1

தனித்துவமான படங்களை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று விரும்புபவர் பார்த்திபன். அதில் உழைப்பிற்கான வெற்றியும் அவருக்குக் கிடைத்திருக்கிறது. அந்தவகையில், அவர் தனது அடுத்தப் படத்தின் பெயர் டீன்ஸ்..இப்படத்தில் பார்த்திபன், யோகி பாபு உள்ளிட்டவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு டி இமான் இசையமைத்திருக்கிறார். பார்த்திபன் மற்றும் இமான் இணைவது இதுவே முதல் முறையாகும். இவர் இசையமைத்த டீன்ஸ் பாடல்களுக்கு ஸ்ருதி ஹாசன், ஸ்ரேயா கோஷல், நித்ய ஸ்ரீ ஆகியோர் பாடல் பாடியிருக்கின்றனர்.

சமீபத்தில் டீன்ஸ் படத்தின் ட்ரைலர் மற்றும் ஃபர்ஸ்ட் லூக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'டீன்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ முதல்முறையாக சென்சார் செய்யப்பட்ட ஃபர்ஸ்ட்லுக் வீடியோ என்ற பெருமையை பெற்றுள்ளது. இதனை உலக சாதனை அமைப்பு அங்கீகரித்து பாராட்டியுள்ளது.

இந்நிலையில் பார்த்திபனின் டீன்ஸ் படம் வரும் ஜூலை 12ம் தேதிவெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் தான் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படமும் வெளியாகிறது.

ஆக ஒரே நாளில் பார்த்திபன் மற்றும் கமல் படம் மோதவுள்ளது     

Share this story