ஒரு வழியாக அமேசானில் வெளியான ‘இரவின் நிழல்’... நிம்மதி பெருமூச்சு விட்ட பார்த்திபன் !

iravin nizhal

‘இரவின் நிழல்’ திரைப்படம் அமேசான் ப்ரைமில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியானது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தன்னுடைய திரைப்படங்களை வித்தியாசமாக கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் இயக்குனர் பார்த்திபன். இவரது தனித்துவமான முயற்சி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி வெளியான திரைப்படம் ‘இரவின் நிழல்’. 

iravin nizhal

சாதனை முயற்சியாக உலகிலேயே ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முதல் நான்-லீனியர் திரைப்படமாக இப்படம் வெளியானது. ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட இந்த படம் கடந்த ஜூலை மாதம் திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை பார்த்த பிரபலங்கள் பார்த்திபனை பாராட்டி வருகின்றனர். 

திரையரங்கில் வெளியான இப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்தனர். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பே அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகும் என பார்த்திபன் அறிவித்திருந்தார். ஆனால் சொன்னபடி படம் ஓடிடியில் வெளியாகவில்லை. இது ரசிகர்களை கவலையடைய செய்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு பிறகு இன்று அமேசான் ப்ரைம் ஓடிடியில் ‘இரவின் நிழல்’ படம் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

 

Share this story