ஆக்ஷன் த்ரில்லரில் 'பரந்தாகுது ஊர்க்குருவி'... டிரெய்லர் வெளியீடு !

paranthaguthu oorkuruvi

ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகியுள்ள 'பரந்தாகுது ஊர்க்குருவி' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 

அறிமுக இயக்குனர் கோ.தனபாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பரந்தாகுது ஊர்க்குருவி'. இந்த படத்தில் நிஷாந்த் ருஷோ கதாநாயகனாகவும், விவேக் பிரசன்னா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஒரே ஒரு நாளில் நடக்கும் சம்பவத்தை வைத்து சர்வைவல் திரில்லர் படமாக இப்படம் உருவாகி வருகிறது. அடந்த காட்டுக்குள் மாட்டிக்கொள்ளும் இருவர் கடையில் எப்படி தப்பிக்கின்றனர் என்பதுதான் முழு கதையாகும்.

paranthaguthu oorkuruvi

இந்த படத்தில் மும்பை மாடல் அழகி காயத்ரி என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராட்சசன் வினோத் சாகர், அருள் சங்கர், கோடங்கி வடிவேல், ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.  முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

paranthaguthu oorkuruvi

ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story