வைரலாகும் ‘பருத்திவீரன்’ படத்தின் சென்சார் சான்றிதழ்.

photo

பருத்திவீரன் படத்தின் பஞ்சாயத்து தீப்பிடித்து எரிந்து ஓய்ந்த நிலையில் தற்போது மீண்டும் புகைவிட கிளம்பியுள்ளது. அதாவது படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகி வைரலாகி வருகிறது.

photo

பருத்திவீரன் பட விவகாரத்தில் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே மோதல் நீடித்த நிலையில் சசிகுமார், பாரதிராஜா, சமுத்திரகனி ஆகியோர் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். தொடந்து ஞானவேல் ராஜாவுக்கு எதிராக கண்டனகளும் வழுத்த நிலையில் அவர் அமீரிடம் நடந்துகொண்டதற்கு வருத்தம் தெரிவித்தார். ஒருவழியாக பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது என நினைக்கையில் இணையத்தில் பருத்திவீரன் பட சென்சார் சான்றிதழ் வெளியாகி வைரலாகி வருகிறது.


காரணம் அதில் தயாரிப்பாளர் என்ற இடத்தில் அமீர் என பெயரிடப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு ரசிகர்கள் ஞானவேல் ராஜாவை டேக் செய்து வருகின்றனர்.

Share this story