நடிகை சமந்தாவை பாராட்டிய பார்வதி...

samantha

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா, மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டதால் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இவரது நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வந்த சிட்டாடெல் வெப் தொடர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இதில் ஆக்‌ஷன் காட்சிகளிலும் கவர்ச்சியான காட்சிகளிலும் நடித்திருந்தார். இது அவரை மீண்டும் லைம் லைட்டுக்கு கொண்டு வந்தது. 

samantha
இந்த நிலையில் மலையாள நடிகை பார்வதி சிட்டாடெல் தொடரில் சமந்தாவின் நடிப்பை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.  இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பார்வதி பகிர்ந்திருப்பதாவது, “நான் நினைத்ததை விட அதிகம் பிடித்திருந்தது. ஏஜென்ட் ஹனி, நீங்கள் ஒரு ஃபயர் ஸ்டார்ட்டர். ஆக்‌ஷன் காட்சிகளில் உங்களை பார்ப்பது செம்ம ட்ரீட்டாக இருந்தது” என குறிப்பிட்டிருந்தார். இவரது பதிவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சமந்தா பகிர்ந்து பார்வதிக்கு நன்றி தெரிவித்தார். 

பார்வதி கடைசியாக தங்கலான் படத்தில் நடித்திருந்தார். இப்போது மலையாளத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். மேலும் தனுஷை எதிர்த்து காப்புரிமை பிரச்சனைக்காக நயன்தாரா வெளியிட்ட அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். 

Share this story