4 வயது மூத்த நடிகையுடன் காதல்.. விரைவில் திருமணம் செய்யும் ‘பசங்க’ கிஷோர் !

kishore

தன்னுடைய 4 வயது மூத்த நடிகையை பசங்க கிஷோர் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 தமிழ் சினிமாவில் இளம் நடிகராக இருப்பவர் கிஷோர். கடந்த 2009-ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான ‘பசங்க’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தேசிய விருதுபெற்ற இந்த படத்தில் சிறுவனாக கிஷோர் நடித்திருந்தார். இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

kishore

 இந்த படத்திற்கு பிறகு கோலிசோடா, கோலி சோடா 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து வஜ்ரம், நெடுஞ்சாலை, ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சீரியல் நடிகை ப்ரீத்தி குமாரை நடிகர் கிஷோர் காதலித்து வருவதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

kishore

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘ஆபீஸ்’ சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ப்ரீத்தி குமார். இதையடுத்து லட்சுமி கல்யாணம், கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தைப்போல உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story