‘தண்டட்டி’ வைத்து வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள படம்... டிரெய்லர் வெளியீடு !

பசுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘தண்டட்டி’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுவாக வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளியாகும் திரைப்படங்களுக்கு வரவேற்பு இருக்கும். அந்த வகையில் மாறுப்பட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தண்டட்டி’. இறந்த பெண்மணியின் காதிலிருந்து காணாமல் போகிவிடும் தண்டட்டியை வைத்து ஏற்படும் பிரச்சனை இப்படம்.
இந்த படத்தில் நடிகர் பசுபதி போலீஸ் கதைக்களத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பசுபதியுடன் இணைந்து ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கியுள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவாளராகவும், கே.எஸ்.சுந்தரசாமி இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
சர்தார், ரன் பேபி ரன் ஆகிய வெற்றி படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்படம் வரும் ஜூன் 23-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.