பசுபதி நடிப்பில் உருவாகி வரும் 'தண்டட்டி'... வித்தியாசமான ஃப்ர்ஸ்ட் லுக் !

thandatti

பசுமதி நடிப்பில் உருவாகி வரும் 'தண்டட்டி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் அசத்தி வருபவர் நடிகர் பசுபதி. பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இதையடுத்து விக்ரம் நடிப்பில் உருவாகும் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். தற்போது புதிய படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். 

thandatti

 அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கத்தில் உருவாகும் அந்த படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  சர்தார், ரன் பேபி ரன் ஆகிய வெற்றி படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தில் பசுபதியுடன் இணைந்து ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவாளராகவும், கே.எஸ்.சுந்தரசாமி இசையமைப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 'தண்டட்டி' என்று வித்தியாசமான தலைப்பிலும், கதைக்களத்திலும் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் போஸ்டரில் நடிகை ரோகினி பிணமாக நாற்காலியில் அமர, ஒருபுறம் பசுபதி போலீஸ் லுக்கிலும், மறுபுறம் விவேக் பிரசன்னா அருவாளுடன் இருக்கிறார். இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

 

Share this story