வித்தியாசமான கதைக்களத்தில் பசுபதி.. ‘தண்டட்டி’ டிரெய்லர் குறித்த புதிய அறிவிப்பு !

Thandatti
 பசுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘தண்டட்டி’ படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் பசுபதி. தற்போது பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்‘ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதுதவிர அவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் ‘தண்டட்டி’. 

Thandatti

சர்தார், ரன் பேபி ரன் ஆகிய வெற்றி படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.  வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யா இயக்கியுள்ளார். இந்த படத்தில் பசுபதியுடன் இணைந்து ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவாளராகவும், கே.எஸ்.சுந்தரசாமி இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படம் வரும் ஜூன் 23-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இசை மற்றும் முன்னோட்டம் வரும் ஜூன் 6-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.  

Share this story