‘பத்து தல’ ஆடியோ விழாவில் விஜய்.. கண்கலங்கிய சிம்பு !

‘பத்து தல’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய காட்சியை பார்த்து நடிகர் சிம்பு கண்கலங்கிய காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'சில்லனு காதல்' படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ‘பத்து தல’ திரைப்படம் உருவாகி வருகிறது.. இந்த படத்தில் ஏஜிஆர் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. இந்த படத்தில் சிம்புடன் இணைந்து கெளதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ‘வாரிசு’ படத்தில் சிம்பு குறித்து விஜய் பேசிய வீடியோ ஒன்று ஒளிப்பரப்பப்பட்டது. அந்த பேச்சை கேட்ட சிம்பு உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். இது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Thalapathy @actorvijay visuals in #PathuThalaAudioLaunch ??????pic.twitter.com/oLwSCKfaAa
— PrayushKhanna?? (@prayushkhanna12) March 18, 2023