சிம்புவின் ‘பத்து தல’ வசூலை குவிக்கிறதா ?.. 3வது நாள் அப்டேட்

pathu thala
 சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ படத்தின் மூன்றாவது நாள் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஏஜிஆர் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 'சில்லனு காதல்' படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

pathu thala

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.  இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

pathu thala

இந்நிலையில் இப்படம் கடந்த மார்ச் 30-ஆம் தேதி வெளியான நிலையில் 12.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்படம் மூன்றாவது நாளில் 20 கோடி வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. 

Share this story