“சினிமாவே வேண்டாம் என்று நினைத்தேன்” - ‘பத்து தல’ நிகழ்ச்சியில் சிம்பு உருக்கம் !

simbu

சினிமாவே வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் ரசிகர்களுக்காக நான் மீண்டும் வந்திருக்கேன் என்று நடிகர் சிம்பு உருக்கமாக பேசியிருக்கிறார். 

‘பத்து தல’ ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு சுவாரஸ்சியமாக பேசினார். அதில், நான் வரும்போது ஒரே விஷயம்தான் என் மனதுல ஓடிக்கிட்டே இருந்தது. அது என்னவென்றால் இன்னைக்கு நான் அழக்கூடாது. நான் எமோஷ்னல் கேரக்டர் என்று உங்களுக்கு தெரியும். நான் படத்தில் சென்டிமென்ட் காட்சி வந்தாலே நான் அழுதுவிடுவேன். நான் ஏன் அழக்கூடாது என்று நினைத்தேன் என்றால் உங்களுக்காக தான். ஏனென்றால் நாம் இதுவரை நிறைய கஷ்டத்தை பார்த்துவிட்டோம். நீங்களும்  எனக்காக கஷ்டத்தை தாங்கினீங்க. இனிமே நீங்க சந்தோஷமாக இருக்கனும். சிரிக்கவேண்டும. 

simbu

இதே நேரு ஸ்டேடித்திற்கு பலமுறை வந்திருக்கிறேன். அப்போது மற்றவர்களுக்காக கூடின கூட்டத்தை பார்த்திருக்கன். ஆனால் முறைமுறையாக என்னை நேசிக்கிற ரசிகர்களை பார்க்க சந்தோஷமாக இருக்கு. எல்லா ஊர்களிலும் இருந்து வந்திருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கு. 

நான் ரொம்ப கஷ்டமான நேரத்தில் இருந்தபோது இந்த படம் ஆரம்பிச்சோம். அந்த நேரத்தில் சினிமாவே வேண்டாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  அப்போது என்னை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னை சந்தித்து இந்த படம் குறித்து பேசினார். கன்னடத்தில் லெஜண்ட் சிவ் ராஜ்குமார் நடித்த ‘முப்தி’ படத்தில் நான் எப்படி நடிக்கிறது என்று யோசிச்சேன். நான் இந்த படத்தில் நடிக்க காரணம் கௌதம் கார்த்தி. இங்க தட்டி கொடுக்கிறது யாரும் இல்லை. தட்டி விடருதுக்கு தான் எல்லாரும் இருக்காங்க. எனக்கு தட்டிக் கொடுக்கிறதுக்கு என்னுடைய ரசிகர்கள் மட்டும் தான் இருக்காங்க. 

simbu

கௌதம் கார்த்திக்கை நடிக்கனா தான் தெரியும். ஆனால் அவர் ஒரு நல்ல நபர். உங்களை போன்று ஒரு நபரை நான் பார்த்ததே இல்லை. இவ்வளவு பெரிய கஷ்டத்திலும் நீங்க இப்படி இருக்கிறதிற்கு நான் தலை வணங்குகிறேன். எனக்கு வெற்றி கிடைக்கிறதோ, இல்லையோ. உங்களுக்கு நிச்சயம் வெற்றிப்படமாக இந்த படம் அமையும் என்று கௌதம் கார்த்திக்கை சிம்பு பாராட்டினார். 

அப்போ குண்டாக இருந்தேன். அதனால் ‘பத்து தல’ படத்தில் நடிக்க ஒத்துக்கிட்டேன். அதற்கு எனக்கு ஏற்பட்ட பிரச்சை. அதிலிருந்து வெளியே வந்து மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களில் நடித்தேன். நான் நினைத்திருந்தேன் என்றால் இந்த படத்திலிருந்து விலகியிருப்பேன். ஆனால் கௌதம் கார்த்திக்காக தான் திரும்பவும் நடித்தேன். 

அதன்பிறகு என்னை சந்தித்த இயக்குனர் கிருஷ்ணா, இந்த படத்தில் நீங்க குண்டு இருக்கவேண்டும் என்று கூறினார். அப்போது உடல் எடையை குறைத்து மிகவும் கஷ்டப்பட்டு வந்தேன். ஒவ்வொரு கிலோ குறைப்பதற்கு எவ்வோ கஷ்டப்பட்டேன் என்று எனக்குதான் தெரியும். 

இயக்குனர் சொல்லிட்டு படத்தை முடிச்சிட்டு போய்டுவாரு. அப்போது சொல்வாங்க. சிம்பு மீண்டும் வெயிட் போட்டுட்டாருன்னு. பழைய மாதிரி ஆரம்பிச்சிட்டாருன்னு. எனக்கு தொந்தரவு கொடுக்கதான் பல பேர் இருக்காங்க என்றார். நானே கஷ்டப்பட்டு இப்போதான் உடல் எடையை குறைச்சிருக்கனேன். அதுக்குள்ளாலேயா என்று இயக்குனரிடம் கேட்டேன். ஆனால் ரசிகர்களுக்காக நாம எதாச்சும் செய்யனும். 108 கிலோ உடல் எடையை குறைச்ச நாம. உடனே கூட்டி மீண்டும் குறைக்க முடியாதா என்றுக்கூறி உடல் எடையை கூட்டி இந்த படத்தில் நடித்தேன். 

முன்னாடியெல்லாம் ஒரு என்ர்ஜி இருக்கும். ஒரு பயராக பேசுவீங்க. இப்ப சாஃப்டா பேசுகிறீங்க என்று சொல்றாங்க. நான் என்னை தட்டிக்கொடுக்கிறதுக்கு தான் அப்போ சத்தமாக பேசினேன். சினிமாவிலேயே இருக்க மாட்டேன் என்று சொன்னாங்க.  ஆனா மாநாடு, வெந்து தணிந்தது காடு என இரண்டு படங்களை அடுத்தடுத்து வெற்றி படமாக்கியுள்ளீர்கள். அதனால் உங்களிடம் பணிந்துதான் பேசுவேன். இனி பேசுகிறது ஒன்றுமே இல்லை. செயல் மட்டும் தான். இனி ஒவ்வொரு நாளும் நம்மல மாத்திக்கிட்டே தான் இருக்கணும். ரசிகர்கள் இன்று வரை என்னோடு இருந்துருக்காங்க. கஷ்டப்பட்டதெல்லாம் போதும், இனி நான் என்ன பண்ணுறன் மட்டும் பாருங்க. இனி உங்களை தலைகுனிய விட மாட்டேன் என்று கூறினார்.   

Share this story