அந்த பாடல் சிம்பு பாடியிருக்கவேண்டும்... ஆனா.. - ஏ.ஆர்.ரகுமான் ஓபன் டாக் !

pathu thala

‘அக்கறையில’ பாடல் சிம்பு பாட வேண்டியது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார். 

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. 

pathu thala

இதில் கலந்துக்கொண்டு பேசிய ஏ.ஆர்.ரகுமான், ‘பத்து தல’ படத்தில் பணியாற்ற ஒப்புக் கொண்ட முதல் காரணம் சிம்புதான். அடுத்த காரணம் ஓபிலி கிருஷ்ணா. இந்த படத்தில் வரும் ‘அக்கறையில’ பாடல் சிம்பு பாட வேண்டிய பாடல். அவர் வெளிநாட்டில் இருந்ததால் அந்த பாடலை நானே பாடிவிட்டேன்.  

pathu thala

என்னுடைய இன்ஸ்பிரேஷன் இயக்குனர் டி.ராஜேந்திரன், இளையராஜா, எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன் உள்ளிட்ட பல பேரிடம் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் டி.ராஜேந்தரிடம் வேலை பணியாற்றும் போது இதுவரை இல்லாத வேகம் உருவாகிறது. அதுதான் எனக்கு அவர் மீது பெரிய இன்ஸ்பிரேஷனாக மாறியது என்று கூறினார். 

 

 

Share this story