சிம்புடன் மோதும் கௌதம் மேனன்... பிறந்தநாளில் மிரட்டலான போஸ்டர் வெளியீடு !

gautham meon

இயக்குனர் கௌதம் மேனன் பிறந்தநாளையொட்டி ‘பத்து தல’ படத்தில் இருந்து மிரட்டலான போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். காதல் மற்றும் ஆக்ஷன் என இரண்டையும் ஒரே நேரத்தில் காட்டி ரசிகர்களை கவர்ந்தவர். ‘மின்னலே’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, காக்கா காக்கா, வேட்டையோடு விளையாடு, என்னை அறிந்தால் உள்ளிட்ட சூப்பர் படங்களை இயக்கியுள்ளார். 

gautham meon

கடைசியாக அவர் இயக்கிய சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனராக மாபெரும் வெற்றி கண்ட அவர், தற்போது நடிகராகவும் களமிறங்கி அனைவரையும் கவர்ந்து வருகிறார். அந்த வகையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், டான், சீதாராமன், மைக்கேல் உள்ளிட்ட படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். 

gautham meon

இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி ‘பத்து தல’ படத்தில் சிம்புவுடன் இருக்கும் மிரட்டலான போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ‘பத்து தல’ படத்தில் கௌதம் மேனன் நடித்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

Share this story