பிரம்மாண்டமாக நடக்கும் ‘பத்து தல’ ஆடியோ லாஞ்ச்... மாஸ் என்ட்ரி கொடுக்கும் சிம்பு !

‘பத்து தல‘ படத்தின் ஆடியோ லாஞ்ச் இன்று மாலை பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்புவின் மாஸ் ஆக்ஷனை பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் திரைப்படம் ‘பத்து தல’. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
'சில்லனு காதல்' படத்தின் இயக்குனர் கிருஷ்ணா உருவாகியுள்ள இந்த படத்தில் ஏஜிஆர் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்புடன் இணைந்து கெளதம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பிரியா பவானி சங்கர், டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று மாலை 5 மணிக்கு சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. வெளிநாடு சென்றிருந்த சிம்பு நேற்று சென்னை வந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் மாஸ் என்ட்ரி கொடுக்கவுள்ளார். அதோடு பல முக்கிய பிரபலங்கள் கலந்துக்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The Stage Is All Set 🔥 Meet You At The Mega-Grand Audio Launch of #Atman @SilambarasanTR_ @Gautham_Karthik ⭐er #PathuThala today at 5 PM @StudioGreen2 @PenMovies@arrahman @nameis_krishna#PathuThalaAudioLaunch #PathuThalaFromMarch30 pic.twitter.com/TNkPG44DFR
— Studio Green (@StudioGreen2) March 18, 2023