டப்பிங்கை முடித்த பிரியா பவானி சங்கர்... சிம்புவின் ‘பத்து தல’ குறித்து முக்கிய அப்டேட்

priya bavani shankar

சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

'சில்லனு காதல்' படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். 

priya bavani shankar

இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.  கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகிறது.

priya bavani shankar

இப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் தனது பகுதி டப்பிங்கை நடிகை பிரியா பவானி சங்கர் நிறைவு செய்துள்ளார். இதையொட்டி டப்பிங் ஸ்டுடியோவில் படக்குழுவினர் பிரியா பவானி சங்கர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

Share this story