செம்ம குத்தாட்டம் போட்டுள்ள சாயிஷா... ‘ராவடி’ வீடியோ பாடல் வெளியீடு

pathuthala

‘பத்து தல’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராவடி’ என தொடங்கும் வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

சிம்புவின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘பத்து தல’. ஏஜிஆரின் வெறியாட்டத்தை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அதேநேரம் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொலவெறியில் சிம்பு ரசிகர்கள் காத்திருப்பதால், தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 

https://twitter.com/vasutheatre/status/1639610946099240960?s=09

ஞானவேல்ராஜா சார்பில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மார்ச் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இயக்குனர் கிருஷ்ணா மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி பட்டையை கிளப்பியுள்ளது. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. 

இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ராவடி' என்ற வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலில் செம்ம குத்தாட்டம் ஒன்றை நடிகை சாயிஷா போட்டுள்ளார். ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story