‘பத்து தல’ அடுத்த பாடலில் சிம்பு புறக்கணிப்பா ?... இயக்குனரின் விளக்கம் !

‘பத்து தல’ படத்தின் இரண்டாவது பாடலில் சிம்பு புறக்கணிக்கப்பட்டதாக வந்த தகவலுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பத்து தல’. இந்த படத்தில் நடிகர் சிம்பு ஏஜிஆர் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சிம்புடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தின் சிம்பு இடம்பெற்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது வெளிநாட்டில் இருக்கும் சிம்பு, டப்பிங் கொடுக்காமல் இழுத்தடித்து வருவதாகவும், அதனால் ‘பத்து தல’ இரண்டாவது பாடல் சிம்பு தவிர்த்து விட்டு படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஏஆர் ரகுமானை வைத்து இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிம்பு குறித்து வெளியான வதந்திகளுக்கு இயக்குனர் கிருஷ்ணா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இரண்டாவது பாடலுக்கான ப்ரோமோ வீடியோவை நாங்கள் திட்டமிட்டபடி உருவாக்கி வருகிறோம். நாங்கள் வெறுப்பு பேச்சை வெறுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
Dear all , just want to make it clear, our original idea itself not to bring @SilambarasanTR_ in our promo video as per our strategy so, don’t abuse his name for no reason our producer @kegvraja @StudioGreen2 has clear idea about promotion of #PathuThala We hate ,hate speech
— Obeli.N.Krishna (@nameis_krishna) February 21, 2023