'பத்து தல' இசை வெளியீடு.. பங்கேற்பாரா சிம்பு ?.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

pathuthala

நடிகர் சிம்பு வெளிநாட்டில் இருப்பதால் 'பத்து தல' இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பாரா என ஆர்வமுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு சுரேஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘பத்து தல’. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் சிம்புடன் இணைந்து கௌதம் கார்த்திக்கும் நடித்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

pathuthala

இதையொட்டி இந்த படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இந்த டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் கெளதம் கார்த்திக், இயக்குனர் கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். அப்போது பேசிய இயக்குனர் கிருஷ்ணா, 'முஃப்தி' படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருந்தாலும், அப்படத்திலிருந்து கதையை மட்டும் எடுத்துக் கொண்டு 90 சதவீத என்னுடைய பாணியில் இயக்கியுள்ளேன் என்று கூறினார். 

pathuthala

மேலும் பேசிய அவர், இந்த படத்திற்கான டப்பிங்கை தாய்லாந்தில் இருந்து சிம்பு கொடுத்துள்ளார். இதற்கிடையே 'பத்து தல' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி வரும் 18-ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில்  நடைபெற உள்ளது. இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் இருக்கும் சிம்பு, இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பாரா என கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் வரும் 15-ஆம் தேதி சிம்பு சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Share this story