மாஸ் நடனமாடிய சிம்பு... 'பத்து தல' ஆடியோ லாஞ்சில் சுவாரஸ்யம் !

simbu

'பத்து தல' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு மாஸ் நடனம் ஆடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  

 நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மிரட்டலான திரைப்படம் 'பத்து தல'. இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. 

simbu

பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் கெளதம் கார்த்திக், நடிகை பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் 'நம்ம சத்தம்' பாடலும் சாண்டி மாஸ்டர் நடனமாடினார். அப்போது சாண்டி மாஸ்டருடன் இணைந்து சிம்புமும் மாஸாக நடனமாடினார். இந்த மாசு நடனத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

simbu

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சற்று நேரத்திற்கு முன் இப்படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.‌

Share this story