அதிரும் சென்னை நேரு ஸ்டேடியம் – ‘பத்து தல’ படத்தின் ஆடியோ லான்ச்.

photo

ரசிகர்களின்  ஆராவாரத்திற்கு மத்தியில் ‘பத்துதல’ படத்தின் ஆடியோலான்ச் விழா கலைகட்டியுள்ளது. ஆர்பரிக்கும் ரசிகர்களின் வீடியோ வெளியாகியுள்ளது.

photo

 சிலம்பரசனின் அசத்தலான நடிப்பில், ஜி ஆர் என்கிற கேங் ஸ்டார்  கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. இந்த படத்தை இயக்குனர் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்த படம் கன்னடத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டான முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகியுள்ளது. வரும் மார்ச் 30ஆம் தேதி உலகம் முழுவதிலும் உள்ள திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கோலாகலமாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.

photo

 தற்போது இசை வெளியீடு விழாவில் ரசிகர்கள் ஆராவாரத்திற்கு மத்தியில் விழா கோலாகலமாக நடந்து வருகிறது. அதற்கான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த விழாவில் சிம்புவின் கெட்டப் ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல்,  நடிகை சாயிஷா அசத்தல்  நடனம் ஆடியுள்ளார்.

photo

Share this story