பத்து தலயுடன் மிரட்டியுள்ளாரா சிம்பு... முதல் நாள் வசூல் குறித்து அறிவிப்பு !

pathuthala

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'பத்து தல' படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.  

 'சில்லனு காதல்' படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’. இந்த படத்தில் ஏஜிஆர் என்ற மிரட்டலான கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். 

pathuthala

இவர்களுடன் கெளதம் மேனன், டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் வெளியாகியுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 

இந்த படத்தை பார்க்க திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதேநேரம் இப்படம் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றுள்ளதாகவும், சிம்புக்கு பெரிய கம்பேக் இந்த படம் கொடுக்கவில்லை என்று சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் 12.3 கோடி வசூலித்துள்ளது. இது சிம்பு கெரியரில் மிகப்பெரிய வசூலாக பார்க்கப்படுகிறது. 

Share this story