சிம்பு பிறந்தநாளில் வெளியாகும் ‘நம்ம சத்தம்’ பாடல்... ‘பத்து தல’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்

pathuthala

சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நடிகர் சிம்பு, ஏஜிஆர் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலான நடித்து வரும் திரைப்படம் ‘பத்து தல’. இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

pathuthala

 கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. ‘ஜில்லுன்னு ஒரு காதல்’ படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது.    ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

pathuthala

தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘நம்ம சத்தம்’ என தொடங்கும் இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து பாடியும் உள்ளார். பாடலாசிரியர் விவேக் எழுதி இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். இந்த பாடல் சிம்புவின் பிறந்தநாளையொட்டி வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

Share this story