நினைவிருக்கா... ஏ.ஆர்.ரகுமான் மகன் இளமை ததும்ப பாடிய மெலோடி பாடல்... ‘பத்து தல’ செகண்ட் சிங்கிள் !

‘பத்து தல’ படத்தில் ஏ.ஆர்.ரகுமான் மகன் பாடிய மெலோடி பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’. இந்த படம் வரும் மார்ச் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. அதனால் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான ‘நம்ம சத்தம்’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘நினைவிருக்கா’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இளமை ததும்ப ததும்ப உருவாகியுள்ள இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன் தனது அழகாக குரலில் பாடியுள்ளார். அவருடன் இணைந்து சக்திஸ்ரீ கோபலனும் இப்பாடலை பாடியுள்ளார். கபிலன் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.