பட வாய்ப்புகளைக் குவித்து வரும் பவித்ரா… கதிர் உடன் புதிய படம்!?
குக் வித் கோமாளி பவித்ரா நடிகர் கதிர் உடன் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான குக் வித் கோமாளி மூலமாக தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் பவித்ரா. பிரபலம் ஆகிவிட்டால் பட வாய்ப்புகள் கதவைத் தட்ட ஆரம்பிக்கும் தானே. பவித்ராவுக்கு தற்போது பட வாய்ப்புகள் அதிகளவில் கிடைத்து வருகின்றன.
ஏற்கனவே ஏஜிஎஸ் எண்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் காமெடி நடிகர் சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் மூலம் பவித்ரா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.
தற்போது நடிகர் கதிர் நடிக்கும் புதிய படத்தில் பவித்ரா இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்திலும் பவித்ரா கதாநாயகியாக நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.