'ஓஜி' படப்பிடிப்பில் இணைந்த பவன் கல்யாண்...!

பவர் ஸ்டார் பவன் கல்யாண் தற்போது மீண்டும் 'ஓஜி' படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.
அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருமான பவர் ஸ்டார் பவன் கல்யாண், இயக்குனர் சுஜீத் இயக்கி வரும் ’ஓஜி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி, அர்ஜுன் தாஸ், ஷாம் மற்றும் ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டி.வி.வி என்டர்டெயின்மென்ட்டின் கிழ் டி.வி.வி தனய்யா தயாரிக்கிறார்.
The #OG steps into his arena. #PKBackOnOGSets
— DVV Entertainment (@DVVMovies) May 14, 2025
இந்த படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பு பணி நிறைவடையாததால் வெளியாக வில்லை. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் பவன் கல்யாண் ’ஒஜி' படப்பிடிப்பில் மீண்டும் இணைந்துள்ளார்.