சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறாரா பவன் கல்யாண்?

pawan kalyan

தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்தவர் பவன் கல்யாண். அரசியல் கட்சி  ஆரம்பித்த அவர் சந்தித்த இரண்டாவது சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகவும் இருக்கிறார்.

தேர்தலுக்கு முன்பாக அவர் “ஹரிஹர வீரமல்லு, ஓஜி, உஸ்தாத் பகத் சிங்” ஆகிய படங்களில் அவர் நடித்து வந்தார். அவற்றில் 'ஹரிஹர வீர மல்லு' படத்தின் படப்பிடிப்பு முடிந்து மே மாதம் 9ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.pawan kalyan

'ஓஜி' படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. 'உஸ்தாத் பகத்சிங்' படத்திற்கு பத்து நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்துள்ளது. அதனால், அந்தப் படத்தை அப்படியே நிறுத்திவிடலாம் என முடிவெடுத்துள்ளார்களாம். 'ஓஜி' படத்தின் படப்பிடிப்பை மட்டும் முடித்து அதை இந்த வருடக் கடைசியில் வெளியிடலாம் என திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்தப் படங்களுடன் சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் முடிவில் பவன் இருக்கிறார் என கூறப்படுகிறது.   

Share this story