பவன் கல்யாண் நடித்துள்ள 'ஹரி ஹர வீர மல்லு' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

pawan kalyan

பவன் கல்யாண் நடித்துள்ள 'ஹரி ஹர வீர மல்லு' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். தற்போது ஹரி ஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜோதி கிருஷ்ணா, கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் மேகா ஸூர்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஏ.எம். ரத்தினம் தயாரிக்கும் 'ஹரி ஹர வீர மல்லு' திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

 



2025 கோடை விடுமுறை கொண்டாட்டமாக வருகிற மார்ச் 28ஆம் தேதி  தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஹரி ஹர வீர மல்லு படக்குழு புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் மே மாதம் 9-ம் தேதி வெளியாக இருக்கிறது.

Share this story