பவன் கல்யாண் குரலில் "கேக்கணும் குருவே" பாடல் வெளியீடு

pawan kalyan

ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "கேக்கணும் குருவே" பாடல் வெளியானது. கி.பி 16 ஆம் நூற்றாண்டின் முகலாயர்கள் காலத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட  உணர்வுப்பூரமான இந்த தத்துவப்பாடல் அனைத்து வயதினரும் ஏற்றுக்கொள்ளூம்படி உலகளாவிய கருத்தை முன்வைக்கும் நோக்கத்தில் படைக்கப்பட்டு இருக்கிறது.
மெகா சூர்யா புரொடக்ஷன் சார்பாக ஏ. தயாகர் ராவ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஜோதி கிருஷ்ணா மற்றும் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கியுள்ளனர். இந்தப் படம், முகலாயப்பேரரசர் காலத்தில் வாழ்ந்த அரசர் அவுரங்கசிப் பற்றிய புனைவுக்கதை. தமிழில் இந்தப் பாடலை பாடலாசிரியர் பா.விஜய் எழுதியுள்ளார். பாடலின் தீம் மற்றும் அது சொல்ல வரும் கருத்தினால் வெகுவாக ஈர்க்கப்பட்ட நடிகர் பவன் கல்யாண், தனது சொந்தக்குரலிலேயே தெலுங்கு பதிப்பில் பாடியுள்ளார்.

மேலும் மற்ற மொழிகளிலும் கூட இவரது குரலே, மேம்பட்ட AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பவன் கல்யாணின் குரலில் உள்ள தனித்தன்மையானது, உலகளாவிய ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணியின் இசையால் இந்தப் பாடல் வரிகளுக்கு உயிரூட்டியுள்ளது. இந்தப் பாடல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.-இன் தத்துவப்பாடல்களை நினைவூட்டும். இந்தப் படத்தில் பாபி தியோல், சுனில், நிதி அகர்வால், மற்றும் நாசர் உட்பட பல நட்சத்திர நடிகர்கள் உள்ளனர். இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா மற்றும் ஞானசேகர் வி.எஸ் ஆகியோரின் ஒளிப்பதிவு
செய்துள்ளனர்.

Share this story