'கொட்டுக்காளி' ஒரு தலைசிறந்த படைப்பு : பி.சி.ஸ்ரீராம் புகழாரம்...!
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் மட்டும் வெளியானது. திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றது. இதனால் இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு மக்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது.
சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படம், வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீ ராம் பாராட்டியுள்ளார். அவரது எக்ஸ் தளப் பக்கத்தில்,'கொட்டுக்காளி' ஒரு தலைசிறந்த படைப்பு எனவும், இயக்குனர் வினோத் ராஜ், சூரி மற்றும் அனா பென்னை வைத்து தலைசிறந்த படைப்பை உருவாக்கியுள்ளார் எனவும், இப்படத்தை தயாரித்த நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தப் படத்தை தியேட்டரில் கொண்டாடுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#Kottukkaali
— pcsreeramISC (@pcsreeram) August 10, 2024
A masterpiece .
Congrats @sooriofficial #Annaben and above all director #Ps Vinoth raj .@Siva_Kartikeyan has produced this masterpiece:
Let us celebrate this film in theatres.
#Kottukkaali
— pcsreeramISC (@pcsreeram) August 10, 2024
A masterpiece .
Congrats @sooriofficial #Annaben and above all director #Ps Vinoth raj .@Siva_Kartikeyan has produced this masterpiece:
Let us celebrate this film in theatres.