“என்ன காரணம்? நடுக்கமா?” – ‘ஜெய் பீம்’ படத்துக்கு தேசிய விருது கிடைக்காததற்கு பி.சி ஸ்ரீராம் கேள்வி.

photo

69வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டநிலையில், சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ படத்துக்கு விருது வழங்கப்படாதது குறித்து பிரபல ஒளிபதிவாளரும், இயக்குநருமான பி.சி ஸ்ரீராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

photo

பல சர்ச்சைகளையும், விவாதங்களையும், பாராட்டுகளையும் சுமந்த திரைப்படம் ‘ஜெய்பீம்’ டி.ஜெ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோரின் எதார்த்தமான நடிப்பில் உருவான இந்த படம் வெளியான சமயத்தில்  நிச்சயம் தேசிய  விருதை வங்கும் என பலரும் கூறியிருந்தனர். ஆனால் நேற்று அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் படத்தின் பெயர் இடம்பெறாதது ரசிகர்கள் மட்டுமல்லாது, திரைத்துறையினர் மத்தியிலும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது.   தற்போது இது குறித்து பிரபல ஒளிபதிவாளரும், இயக்குநருமான பி.சி ஸ்ரீ ராம், கேள்வி எழுப்பியுள்ளார்.

அதாவது தனது எக்ஸ் பக்கத்தில், தேசிய விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். மிக மோசமான தேர்வு என ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என ஒரு பதிவிலும், மற்றுமொரு பதிவில் ‘ஜெய் பீம் படத்துக்கு தேசிய விருது கொடுக்காததற்கு என்ன காரணம்?, இந்தியாவின் கூக்குரல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியதா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this story