பி சி ஸ்ரீராம் ட்வீட்டால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள்…..

photo

தமிழ் சினிமாவின் ஐகானிக்ஒளிப்பதிவாளரான பி.சி. ஸ்ரீராமின் டிவிட்டர் பதிவு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் தனது மாயாஜால கைவண்ணத்தை காட்டி புகழ்பெற்றவர் பி சி ஸ்ரீராம். தமிழ் சினிமாவில் ‘ரெமோ’ படத்தில் கடைசியாக பணியாற்றினார், அதைத்தொடர்ந்து இந்தி, தெலுங்கு திரையுலகம் பக்கம் பிஸியாகிவிட்டார். இந்த நிலையில் சமீபத்தில் தமிழ் சினிமாவிற்கு திரும்ப போவதாக ட்வீட் செய்திருந்தார்.

அதாவது ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ராகுல் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான  ராஜ்மோகன் இயக்கும் புதிய திரைப்படத்தில் இணைய இருப்பதாக தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல் படம் குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் அறிவித்திருந்தார். இந்த தகவல் ரசிகர்களுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தற்சமயம்  “தனிப்பட்ட காரணங்களால் என்னால் கடந்த வாரத்தில் அறிவித்த புராஜெக்ட்டில் இணைய முடியவில்லை, பட குழுவிற்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட் ரசிகர்களுக்கு அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share this story