"சூர்யா சேதுபதி முரட்டுப் பையனாக நடித்து மிரட்டியுள்ளார்"-பாராட்டு மழையில் பீனிக்ஸ்

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் படம், ஃபீனிஸ்க். இந்த படத்தை அனல் அரசு இயக்கியிருக்கிறார். இந்த படம், ஆக்ஷன் த்ரில்லராக இருப்பதாக கூறப்படுகிறது. சாம் சி.எஸ்சின் இசை நன்றாக இருப்பதாகவும், கேமரா வர்க் நன்றாக இருப்பதாகவும் சிலர் கூறியிருக்கின்றனர்.
முதல் பாதி மொத்தமாக வைலன்ஸ் ஆக இருப்பதாகவும், அதை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்றும் கூறியிருக்கின்றனர்.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சூர்யா சேதுபதி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் வெளுத்து வாங்கி இருக்கிறார
ஒருவர் ட்விட்டர் விமர்சனத்தில் 'பீனிக்ஸ் வீழான்' படத்துக்கு 5க்கு 3.25 ரேட்டிங் கொடுத்திருக்கிறார். முதல் பாதி முழுவதுமே சண்டைக் காட்சிகள் தான் என்றும் MMA மற்றும் சிறுவர் சீர்த்திருந்த பள்ளி காட்சிகள் தான் படத்தில் அதிகம். அனல் அரசு மாஸ்டரின் சண்டைக் காட்சிகள் படத்திற்கு பெரும் பலமாக உள்ளது. சூர்யா சேதுபதி ஹீரோவாக முதல் படத்திலேயே தடம் பதிக்கிறார் என ஒருவர் விமர்சனம் கொடுத்துள்ளார்.
ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டைக் காட்சிகளுடன் படத்தை பார்க்க விரும்புபவர்களுக்கான விருந்தை சூர்யா சேதுபதி தனது முதல் படத்திலேயே கொடுத்திருக்கிறார். அம்மாவாக நடித்துள்ள தேவதர்ஷினியின் நடிப்பு சிறப்பு. வில்லன்கள் எல்லாம் கேரிகேச்சர்கள் போல வந்து செல்வது தான் படத்திற்கு மைனஸ். சூர்யா சேதுபதி எடுத்துக் கொண்ட கதையில் முரட்டுப் பையனாக நடித்து மிரட்டியுள்ளார். மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் காட்சிகளில் வேறலெவல் என ஒரு நெட்டிசன் கூறியுள்ளார்