நெட்டிசன்களின் பாராட்டு மழையில் "பறந்து போ" -வெளியான விமர்சனம்

இயக்குனர் ராமின் கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி, பேரன்பு படங்களை அழுது கொண்டே பார்த்து இருப்போம். பறந்து போ முற்றிலும் வேறு அனுபவம். அவ்வளவு சிரிப்பு, சிவா, கிரேஸ் ஆண்டனி, சிறுவன் மிதுல்ராயன், அஞ்சலி, அஜூவர்கீஸ் சிரிக்க வைக்கிறார்கள். சிரித்து கொண்டே, கை தட்டி ஏகப்பட்ட சீன் களை அனுபவிக்கலாம்
குடும்பம், குழந்தைகள், பரபரப்பான வாழ்க்கை, ஓட்டம் என பல விஷயங்களையும் பேசுகிறது. ஏகாம்பரம் ஒளிப்பதிவு, மதன் கார்க்கி வரிகள், சந்தோஷ் தயாநிதி இசை படத்துக்கு பலம். பக்கா கலகல, காமெடி கலந்த கமர்சியல் கதை. குடும்பம், குழந்தைகளுடன் பார்த்தால் அந்த நாள் மறக்க முடியாத நாளாக இருக்கும். வாழ்நாள் முழுக்க படம், சீன்கள் குறித்த நினைவு இருக்கும். முந்தைய படங்களில் அழ வைத்த இயக்குனர் ராம், இதில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். சிவா ,கிரேஸ் ஆண்டனி, சிறுவன் மிதுல்ராயன், அஞ்சலி, அஜுவர்கீஸ் போட்டி போட்டி நடித்து ரசிக்க வைக்கிறார்கள். 2025ல் ஹிட் படமும் கூட” என பாராட்டி பதிவிட்டுள்ளார்.
சில இடங்களில் சிறுவனின் சேட்டைகள் மற்றும் வசனங்கள் ஓவர்டோஸாக தெரியலாம். ஆனால், இன்றைய ஜென் ஸீ கிட்ஸ்கள் இதை விட சுட்டியாகத்தான் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் அடிக்கடி வரும் பாடல்கள் சற்றே கதையுடன் ஒன்றிணைவதை தடுப்பது போன்ற உணர்வை கொடுக்கலாம். ஆனால், அது போக போக பழகிவிடும் ரகமாகத்தான் உள்ளது. இந்த பறந்து போ படத்தை தாராளமாக இந்த வாரம் குடும்பத்துடன் தியேட்டர்களில் கண்டு சிரிக்கலாம், நிறைய சிந்திக்கலாம்