மயில்சாமியை நினைவு கூறும் சென்னை மக்கள்

மயில்சாமியை நினைவு கூறும் சென்னை மக்கள்

சென்னையில் மிச்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத அளவிலும், வகையிலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் என ஏராளமானோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். படகுகள் மூலம் மக்கள் பாதுகாப்பான இடங்களிலும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

மயில்சாமியை நினைவு கூறும் சென்னை மக்கள்

இந்நிலையில், 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது நடிகர் மயில்சாமி சாலிகிராம மக்களுக்கு உதவி செய்ததை அவர்கள் நினைவு கூர்ந்தனர். மயில்சாமியின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

Share this story