சென்னையில் நாளை முதல் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி

சென்னையில் நாளை முதல் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி

முன்னணி இயக்குனரான பா.ரஞ்சித், சார்பட்டா பரம்பரை,  நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு விக்ரமுடன் கூட்டணி அமைத்து ‘தங்கலான்’ படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து உள்ளது. இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து மலையாள நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளது. இந்நிலையில் பா ரஞ்சித் ஆண்டு தோறும்  மார்கழியில் மக்களிசை என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். 

சென்னையில் நாளை முதல் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி

இந்நிலையில், சென்னையில் நாளை இந்நிகழ்ச்சி தொடங்குகிறது. மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் உயர்நிலை பள்ளியில் மதியம் 2 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், பாரம்பரிய இசைக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். அடுத்த 3 நாட்களுக்கு சென்னையில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

Share this story