‘பேரன்பும், பெருங்கோபமும்’.. சமூகத்தின் ஏற்றத் தாழ்வை கிழித்தெறியும் படைப்பு !

PeranbumPerungobamum

 சமூகத்தின் ஏற்றத் தாழ்வை கிழித்தெறியும் படைப்பாக ‘பேரன்பும், பெருங்கோபமும்’ படம் உருவாகி வருகிறது. 

பரியேறும் பெருமாள், அசுரன் ஆகிய படங்களின் வரிசையில் உருவாகி வருகிறது ‘பேரன்பும், பெருங்கோபமும்’. சமூகத்தின் ஏற்றத் தாழ்வை கிழித்தெறியும் படைப்பாக இந்த படம் உருவாகிறது. அதாவது பட்டங்களால் தன் பெயரை அலங்கரிப்பதை விட, நல்ல சிந்தனைகளால் மனதை அலங்கரிப்பவனே மேன்மையானவன். இப்படிப்பட்ட சிந்தனை கொண்ட ஒரு சாமானியனின் கதையாக இப்படம் உருவாகிறது. 

PeranbumPerungobamum

1998, 2000, 2022 என மூன்று காலக்கட்டங்களில் இப்படத்தின் கதை நகரவிருக்கிறது. பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் படித்த மாணவர் சிவபிரகாஷ் இந்த படத்தை இயக்குகிறார். அவர் வெற்றிமாறன், பாலா உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். 

PeranbumPerungobamum

இந்த படத்தில் புதுமுகங்கள் கதாநாயகனாக விஜித் மற்றும் கதாநாயகியாக ஷாலி நிவேகாஸ் நடிக்கின்றனர். இவர்களுடன் மைம் கோபி, அருள்தாஸ், சுபத்ரா, விஜய் டிவி தீபா, சாய் வினோத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். 

PeranbumPerungobamum

VAU MEDIA ENTERTAINMENT சார்பில் தயாரிப்பாளர் துரை வீரசக்தி இப்படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

Share this story